Wednesday, 8 April 2009

அமுக்கான் (எ) அமுக்குப் பேய் (எ) Sleeping Paralysis


லதானந்த் அங்கிள் அமுக்கான்னு ஒரு பதிவு போட்டு சிரியஸா இல்லாம சீரியஸா பதில் சொல்ல சொல்லி இருக்காரு. அவரு (தனியா) தூங்கிகிட்டு இருக்கும் போது யாரோ அமுக்குற மாதிரி இருக்காம். கைய கால அசைக்க முடியாம அதலபாதாளத்துக்குள்ளாற விழுகுற மாதிரி ஒரே பீலிங்ஸாம். ரொம்பவே பயந்துட்ட மாதிரி தெரியுது.

எங்க ஊரு பக்கம் இதுக்கு பேரு 'அமுக்குப் பேய்'. அலோபதி மருத்துவத்துல இத Sleeping paralysis-ன்னு சொல்லுவாங்க. இந்த அனுபவம் எல்லோருக்கும் ஒரு தடவையாவது வந்திருக்கும்னு சொல்லுறாங்க. உங்களுக்கு இது வரைக்கும் இந்த அனுபவம் வந்தது இல்லைன்னா ஒன்னு நீங்க ரொம்ப சின்ன புள்ளைன்னு அர்த்தம். இல்லாட்டி போனா பேய் அமுக்குறது கூட தெரியாம நீங்க ஓவர் மப்புல தூங்குறீங்கன்னு அர்த்தம்.


இந்த பேய் ஏன் வருதுன்னு பார்க்கலாம். பொதுவா நீங்க தூக்கத்துல இருந்து எழுந்திருக்கும் போது உங்க மூளை உடம்பு ரெண்டும் ஒரே நேரத்துல எழுந்திரிக்கனும். ஆனா சில சமயம் மூளை சுறுசுறுப்பா எழுந்த பிறகும் உடம்பு மட்டும் சோம்பேறித்தனமா படுத்துக்கிட்டே இருக்கும். மூளைய பொருத்த வரைக்கும் உங்களுக்கு முழிப்பு வந்தாச்சு ஆனா உங்க மத்த புலன்கள் எல்லாம் இன்னும் முழிக்காததால மூளை தர்ற சிக்னல் எதுவும் உங்க உடம்புக்கு எட்டாது. உங்க மூளை ஆணையிட்டாலும், மனசு ஆசைப்பட்டாலும் உங்களால கை, கால், மூக்கு, முடி எதையுமே அசைக்க முடியாது. என்னடா நான் கைய தூக்க சொல்லி ஆர்டர் போட்டும் இந்த கை சும்மாவே இருக்கேன்னு மூளையும் கொஞ்சம் குழம்பிப் போயிடும். அந்த மாதிரி நேரத்துல நீங்க சின்ன வயசுல படிச்ச திகில் கதை எல்லாம் உங்க மூளைக்கு ஞாபகம் வந்து...அமுக்குப் பேய்!

சரி இந்த மூளையும் உடம்பும் வேற வேற நேரத்துல எந்திரிக்க என்ன காரணம்? அது இன்னும் யாருக்கும் சரியா தெரியலை. ஒழுங்கில்லாத தூக்கம், மனச்சுமை, புது சூழ்நிலை இது மாதிரி வெண்டைக்காய விளக்கெண்ணைல முக்கி எடுத்த மாதிரி காரணம் சொல்லுறாங்க. நீங்க கைய கால அசைக்காம நல்ல ட்ரீம் அடிச்சிக்கிட்டு இருக்க சொல்ல, டமால்னு முழிப்பு வருதுன்னு வச்சிக்கோங்க, உங்க உணர்ச்சி எல்லாம் திரும்பிடும். ஆனா உங்க மூளையில ஒரு பார்ட் மட்டும் இது வெறும் கனவு தான், இதுக்கு போயி எதுக்கு கைய கால ஆட்டிக்கிட்டு கம்முன்னு கிடன்னு உடம்புக்கு ஆர்டர் போடுறதும் ஒரு காரணம்னு ஆராய்ஞ்சி பிரிச்சி மேஞ்சி கண்டுபிடிச்சி இருக்காங்க.

இந்த பிரச்சனை அடிக்கடி வந்தா, இனிமே மல்லாக்க படுக்காம குப்பற படுங்க. அமுக்கான் வர்றது குறையும்.

14 குட்டு:

said...

நல்ல விளக்கத்திற்கு நன்றி. //மனசு ஆசைப்பட்டாலும் உங்களால கை, கால், மூக்கு, முடி எதையுமே அசைக்க முடியாது.// அது சரி...... முடிய எப்படி அசைக்கிறது?

Anonymous said...

நல்ல பதிவு

ilayadhasan said...

மிகவும் சரியான விளக்கம். சமீபத்தில் , எனக்கு தெரிந்த ஒருவரின் தாயார்
தன் மகனை பார்க்க சிங்கை வந்திருந்தார். மகன் அதற்கு ஒரு மாதத்துக்கு முன் தான் ஒரு வாடகை வீட்டிற்கு குடியேறினார். மகனுடன் தங்க வந்த தாயாருக்கு
நீங்கள் சொன்ன மாதிரி புது சூழல் காரணமாக , இந்த அமுக்குவானால் அவதிப்பட்டுள்ளார் ...ஆனால் அவருக்கு இந்த சயின்ஸ் விளக்கமெல்லாம் தெரியாததால் , அந்த வீட்டில் பேய் உள்ளதாக நம்பி உடனே வீட்டை மாற்ற சொல்லி , காலி பண்ணி போய் விட்டார்கள் . மகனுக்கு இரண்டு மாத வாடகை பணம் நட்டம். இதுல்ல கூத்து என்னன்ன , அந்த வாடகை வீடு ஓனர் ஒரு சைனீஸ்,அவர் சொன்ன டயலாக் 'சில சமயம் பேய்க்கும் மனுசனுக்கும் ஆகாது ,
இப்படிதான் பாடா படுத்தும் , நான் பேய் ஒட்டி தர்றேன்நு சொல்லி
பாத்திருக்காரு , மகன் கேட்கல்லை , ஓனர் முன் பணம் திருப்பி கொடுக்க மாட்டேனு சொல்லி அனுப்பி வட்சிடாறு ...

said...

அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தை, எளிதாக புரியும்படி விளக்கிருக்கீங்க.
நல்ல பதிவு!

said...

NYS AND USEFUL ARTICLE DUDE...CONGRATS...

said...

ஒரே ஒரு முறை இப்படி அவதிப்பட்டு விடைகிடைக்காமல் இன்று வரை திணறியிருந்தவனுக்கு மிகச்சரியாக விளக்கமளித்துள்ளீர்கள். நன்றி.! நல்ல நடை.. கொஞ்சம் கிண்டலுடன்..சிறப்பான பதிவு. ரசித்தேன், மணிவண்ணன்.!

said...

//அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தை, எளிதாக புரியும்படி விளக்கிருக்கீங்க.
நல்ல பதிவு!//

அதே ! அதே !!

said...

நல்ல பதிவு.

said...

எனக்கு 2 முறை வந்துள்ளது. அதிலிருந்து daily குப்புறத்தான் :)விளக்கதிற்கு நன்றி

said...

புதுத் தகவல்!!!
நன்றி...
அன்புடன் அருணா

said...

மிகச் சரியாக விளக்கி இருக்கிறீர்கள்

நன்றி

வாழ்த்துக்கள்...

said...

தூயா, Joe, டயானா சதா'சக்தி'நாதன், ஆதிமூலகிருஷ்ணன், சதங்கா, இளமாயா, Subramania Athithan, அன்புடன் அருணா, அறிவே தெய்வம்: நன்றி!

said...

//அமர பாரதி: அது சரி...... முடிய எப்படி அசைக்கிறது?//

அது அப்படியே ஒரு flowல வந்திடுச்சு :)

said...

//@ilayadhasan //

அனுபவம் சூப்பர். அந்த சைனாக்காரர் சொன்ன காரணம் சூப்பரோ சூப்பர்! :)

நல்லவேளை, இரண்டு மாத வாடகையுடன் போனதே. பேய் ஓட்ட அதை விட அதிக செலவாகி இருக்குமே!