Tuesday, 2 September 2008

கூகிள் குரோமில் தமிழ்மணம்

கூகிள் நிறுவனம் சிறிது நேரத்துக்கு முன்னர் க்ரோம் (Chrome) என்னும் இணைய உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது. தரவிரக்க இங்கே செல்லவும்.

க்ரோமில் தமிழ்மணம் நன்றாகவே தெரிகிறது :)

(பெரிதாகப் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்)


விரிவான விமர்சனம் விரைவில்...

11 குட்டு:

said...

NHM, illaati e-kalaippai vechu thattachi paarunga. :)

said...

//ILA said...
NHM, illaati e-kalaippai vechu thattachi paarunga. :)//
நான் முன்பு ஒரு முறை முயற்சித்த போது NHM, இ-கலப்பை இரண்டுமே என் கணினியில் ஒழுங்காக வேலை செய்யவில்லை (என்னுடையது ஜெர்மன் லே-அவுட் கீ போர்ட்). அதிலிருந்து ஃபயர்பாக்ஸ் தமிழ்விசையை தான் உபயோகப்படுத்தி வருகிறேன். NHM, இ-கலப்பை இரண்டுமே இப்பொழுது என்னிடம் கிடையாது! :(

said...

இளா,
இப்பொழுது தான் தங்களது பதிவைப் (http://vivasaayi.blogspot.com/2008/09/google-chrome-sucks-for-tamil-unicode.html) பார்த்தேன் :(
விரைவில் சரியாகும் என நம்புவோம்!

said...

i tried it (am at office and connecting to internet via Proxy) .. Chrome sucks so far :-) Gmail / Google Reader/ Yahoo / Indian Banking sites/ Thamizhaman .. aren't loading completely. Seems to get stuck somewhere inbetween..

said...

//யாத்ரீகன் said...

i tried it (am at office and connecting to internet via Proxy) .. Chrome sucks so far :-) Gmail / Google Reader/ Yahoo / Indian Banking sites/ Thamizhaman .. aren't loading completely. Seems to get stuck somewhere inbetween..//

அப்படியா? நான் முயன்ற வரை அனைத்து தளங்களும் ஒழுங்காகவே வருகிறது. குமுதம், விகடன், தினமலர் போன்ற தளங்கள் மட்டும் திணறுகிறது, அனேகமாம Flash காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

said...

I feel sad for Firefox which has been showing Google as the default page since v1.0.

Big business will be big business!

said...

//I feel sad for Firefox which has been showing Google as the default page since v1.0.

Big business will be big business!//

மனதைத்தொட்டது VoW.

said...

//Voice on Wings said...

I feel sad for Firefox which has been showing Google as the default page since v1.0.

Big business will be big business!
//
அதே நேரம் கூகிள் ஃபயர்பாக்ஸுக்கும் ஆப்பிளின் சஃபாரிக்கும் கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுத்ததை (கொடுப்பதை?) மறக்க வேண்டாம்! :)
ஃபயர்பாக்ஸ் கூகிளை முன்னிறுத்தியதற்கு காரணமும் வியாபாரம் தான், இன்று கூகிள் க்ரோமின் மூலமாக ஃபயர்பாக்ஸுக்கு போட்டியாக மாறியதற்கு காரணமும் வியாபாரம் தான். எல்லாம் பண மயம்! :)

said...

மணிவண்ணன், நீங்கள் சொல்வதில் நியாயமுண்டு.

ஆனாலும் இணையச் செல்நெறிகளை அவதானித்து வருபவனாக firefox இன் பங்கு இந்த நாடகத்தில் முடியப்போவது தெரிகிறது.

(ஆனால் firefox தன்னை சிலவேளை சிறப்பாகத் தகவமைத்துக்கொண்டு புதுப்பிறவியும் எடுக்க முடியும்)

IE முற்றாகவே துடைத்தகற்றப்படப்போவதில் மகிழ்ச்சி இருந்தாலும் இத்தனை நாள் காதலுடன் பயன்படுத்திய firefox இன் நிலை கவலையளிக்கத்தானே செய்யும்?


ஆனால் கூகிள் தன்னை தனது உலாவியுள் திணிப்பதை எவ்வளவுக்கெவ்வளவு தவிர்க்குமோ அவ்வளவுக்கவ்வள்வு அதன் உலாவிக்கு நல்லது.

said...

மயூரன்,

//ஆனால் firefox தன்னை சிலவேளை சிறப்பாகத் தகவமைத்துக்கொண்டு புதுப்பிறவியும் எடுக்க முடியும்//

அப்படியே ஆகும் என நம்புவோம்!

//IE முற்றாகவே துடைத்தகற்றப்படப்போவதில் மகிழ்ச்சி இருந்தாலும் இத்தனை நாள் காதலுடன் பயன்படுத்திய firefox இன் நிலை கவலையளிக்கத்தானே செய்யும்?//

நான் IE உபயோகிப்பவன் இல்லை என்றாலும், அது துடைத்தகற்றடப்பட வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. இது போன்ற போட்டிகளின் விளைவாக IE மேம்பட்டால் எனக்கு சந்தோஷமே (அப்படி நடக்குமா என்பது வேறு பிரச்சனை!). மற்றபடி அதிகாரம் மைக்ரோசாப்டின் கையில் இருந்து கூகிளின் கைக்கு மாறுவதால் எந்த நன்மையும் இல்லை.

//ஆனால் கூகிள் தன்னை தனது உலாவியுள் திணிப்பதை எவ்வளவுக்கெவ்வளவு தவிர்க்குமோ அவ்வளவுக்கவ்வள்வு அதன் உலாவிக்கு நல்லது.//
அப்படிப்பட்ட திணிப்பு தவிர்க்க முடியாதது என்றே எனக்கு தோன்றுகிறது. அது வெளிப்படையாக இருக்குமா இல்லை மறைவாக நடக்குமா என்பது தான் கேள்வி. உதாரணத்திற்கு உங்கள் உலவியின் உதவியுடன் நீங்கள் செல்லும் தளங்களைப் பற்றிய தகவலறிந்து சம்பந்தப்ப்ட்ட விளம்பரங்களை உங்கள் ஜி-மெயிலில் வரச் செய்வார்கள் என்றே நினைக்கிறேன். இது இப்பொழுதே நடப்பது தான், ஆனால் உலவியும் கூகிள் வசம் வந்தால் இதன் வீரியம் இன்னும் அதிகமாகலாம்!

said...

//மற்றபடி அதிகாரம் மைக்ரோசாப்டின் கையில் இருந்து கூகிளின் கைக்கு மாறுவதால் எந்த நன்மையும் இல்லை//

ஆனால் குரோம் ஐ பொறுத்தவரை ஒரு நன்மை உண்டு. ஆணைமூலமும் "ஐடியா" வும் திறந்துவிடப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் முன்னேற்றங்கள் கண்டால் அந்த முன்னேற்றங்களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் இங்கே திறந்த ஆணைமூலமாக இருப்பதால் இன்னொரு உலாவி இந்த ஆணைமூலத்தின் அடிப்படையில், வேலையை வீண்விரயமாக்கி முதலிலிருந்து தொடங்காமல், மேம்பட்ட வசதிகளுடன் வர வாய்ப்பிருக்கிறது.


கூடவே, குரோமின் ஆணைத்தொடர்களை firefox கூட பயன்படுத்தி தன்னை மேம்படுத்திக்கொள்ள்லாம்.