Wednesday, 9 July 2008

தசாவதாரம் - ஒரு கட்டாயப் பதிவு மற்றும் இளைய தளபதியின் சபதம்.

அன்புடையீர்,
தங்களது பதிவில் இதுவரை தசாவதாரம் திரைப்படத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லை என்பதை அறிந்தோம். இதன் மூலம் நீங்கள் ஒரு உண்மையான தமிழ் பதிவர் கிடையாது என்பது ஐயமின்றி நிரூபணமாகியுள்ளது. இதன் காரணமாக நாளை காலை 10:00 மணி முதல் உங்கள் பதிவுகள் திரட்டப்படுவது நிறுத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நேர்மையான தமிழ் பதிவர் எனும் பட்சத்தில் நாளை காலை இந்திய நேரம் 10:00 மணிக்குள் தசாவதாரம் திரைப்படத்தைப் பற்றி ஒரு பதிவேனும் வெளியிட வேண்டும் என்றும் அப்படி இல்லாது போனால் முன்னர் சொன்னபடி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
நிர்வாகி
**********

பிகு: இன்னும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என்பது போன்ற சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இதுவரை பதிவெழுதியவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு தான் விமர்சித்தார்கள் என்று நினைக்கும் அளவிற்கு நீங்கள் அறிவிலி அல்ல என்று நம்புகிறோம்.
----------------------------------------------

இப்படி ஒரு மின்னஞ்சல் இன்று எனக்கு ஒரு பிரபல தமிழ் பதிவுகள் திரட்டியின் நிர்வாகியிடம் இருந்து வந்தது. சிவாஜிக்கு பதிவெழுதாத நான் தசாவதாரத்திற்கு மட்டும் ஏன் எழுத வேண்டும் என்று ஒரு கணம் தோன்றியது. இருந்தாலும் எதற்கு வம்பு? இதோ...

படம் ரொம்ப குப்பை என்று சொல்ல முடியாது. நான் இதற்கு முன் கடைசியாக பார்த்த "யாரடி நீ மோகினி" படத்துடன் ஒப்பிட்டால் இது கொஞ்சம் தான் குப்பை. கதைக்கு ஏற்ற வேஷம் கட்டுவது காலுக்கு செருப்பு வாங்குவது என்றால் வேஷத்துக்கு கதை என்பது செருப்புக்கு ஏற்றபடி காலைச் செதுக்குவது. தசாவதாரம் இரண்டாவது வகை. அட நல்ல செருப்புக்காக காலை வெட்டுவதை கூட ஒரு வகையில் ஒப்புக் கொள்ளலாம். போயும் போயும் இப்படி ஒரு அடாசு பிஞ்ச செருப்புக்காகவா கதை என்னும் காலை வெட்ட வேண்டும்?

இந்த படத்தை மைக்கேல் மதன காம ராஜன், பஞ்சதந்திரம் போல முழு நீள நகைச்சுவைப் படமாக எடுத்திருந்தால் ரசித்திருப்பேனோ என்னவோ? ஆனால் இந்தக் குறையை ஓரளவிற்கு போக்கியது இப்படத்தின் நுண்ணரசியலைப் பற்றிய பதிவுகள் தான். உதாரணம் பூவராகனின் 'தியாகம்' பற்றி பைத்தியக்காரன் எழுதியிருந்தது. ஒரு வேளை படத்தில் பூவராகவனை ஒரு ஆதிக்க சாதி கதாபாத்திரம் காப்பாற்றுவது போல வந்திருந்தால் பைத்தியக்காரரின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுது வரும் சிரிப்பு ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தியை அளிக்கிறது.

நிற்க. ஒரு விசயம் கேள்விப்பட்டேன். விக்ரம், அஜீத், சூர்யா போன்றவர்கள் படத்துக்கு படம் வேறுபாடு காட்டும் பொழுது இளைய தளபதி டாக்டர். விஜய் மட்டும் ஒரே மாதிரியாக நடிப்பது குறித்து அவர் ரசிகர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே படத்தில் பதில் சொல்ல கமலின் பத்து வேட சாதனையை முறியடித்து 12 வேடங்களில் நடித்து போட்டி நடிகர்களுக்கு பதிலளிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். தனது 12 வேடங்களும் மிக வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக உலக அளவில் புகழ் பெற்ற ஒப்பனை கலைஞர்களோடு ஆலோசனை செய்திருக்கிறார். ஆலோசனையின் முடிவில் விஜய் ஓ.கே செய்த 12 வேடங்கள் தான் நீங்கள் கீழே பார்ப்பது. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வடிவமைக்க கமலை அணுகப் போவதாக விஜயின் தந்தை திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.


13 குட்டு:

said...

ஆலோசனையின் முடிவில் விஜய் ஓ.கே செய்த 12 வேடங்கள் தான் நீங்கள் கீழே பார்ப்பது. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வடிவமைக்க கமலை அணுகப் போவதாக விஜயின் தந்தை திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்
----------
super

said...

விஜயின் 12 வேடங்களும் அட்டகாசமாக இருக்கிறது. அப்படியே 12 வித மொழிகளில் ங்ண்ணா எனப்பேசுவரா?

Anonymous said...

Yes Vijay will say 'ங்ண்ணா' in 12Languages

said...

ஹா ஹா ஹா, சான்சே இல்ல, சூப்பர், சூப்பர். ரொம்ப ரொம்ப கலக்கலா எழுதிருக்கீங்க

said...

//விஜய் ஓ.கே செய்த 12 வேடங்கள்//

:)))))))))

enna appadi oru kaandu vijay meela...

karki said...

தசாவதாரம் பற்றி எழுத சொன்னால் தொடர்பே இல்லாமல் விஜயை கிண்டல் அடிக்கும் உங்கள் செய்கைக்கு நன்றி.புக்ஹழ் பெற இரண்டு வழிகள்.நம் திறமையை வெளிப்படுத்தி புக்ஹழ் பெறலாம்.இல்லை புகழோடு இருப்பவரை இகழ்ந்து புகழ் பெறலாம்.நீங்கள் இரண்டாவது வழியில் செல்கிறீர்கள்.

நீங்கள் சைவம் என்றால் சைவ உணவு விடுதிக்கு செல்லுங்கள்.அசைவ விடுதிக்கு வந்து ஐயோ இங்கே ஆடு மாடு கரி செய்கிறார்கள் என்று ஏன் கூவ வேண்டும்? ஆபாச படம் எடுப்பதையே பெருமையாக நினைக்கும் பலர் இருக்கும் திரை உலகில் விஜயின் பொழுதுபோக்கு படங்கள் பற்றி குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?அப்படியே குறை சொன்னாலும் முதலில் ரஜினியின் படங்களை பற்றி சொல்லி விடும்..அவரின் வால் தானே இந்த விஜய் ..

said...

தசாவதாரம் மாதிரி உங்க பதிவு ஆரம்பமும் சூப்பர், முடிவும் சூப்பர்....

said...

:))))))))

said...

ananth, வந்தியத்தேவன், Anonymous, rapp, Sen22, சரவணகுமரன், SurveySan:
வருகைக்கு நன்றி

said...

//karki said: புகழோடு இருப்பவரை இகழ்ந்து புகழ் பெறலாம்.//
நான் விஜயை பற்றி தனிப்பட்ட முறையில் கண்ணியமில்லாமல் எழுதியிருக்கிறேனா? அவர் படங்களைப் பற்றிய எனது விமர்சனம் எப்படி உங்களுக்கு இகழ்ச்சியாக படுகிறது?

//karki said: அப்படியே குறை சொன்னாலும் முதலில் ரஜினியின் படங்களை பற்றி சொல்லி விடும்//
சொல்லலாம் தான். ஆனால் நான் ஏன் எம்.ஜி.ஆர் படங்களைப் பற்றி சொல்லவில்லை என்ற கேள்வியை வேறு யாராவது எழுப்புவார்களே!? அப்பொழுது என்ன செய்வது? ஒருவர் படத்தைப் பற்றி விமர்சிக்கும் முன்னால் நான் வேறு எந்தனை பேரின் படங்களை விமர்சித்திருக்க வேண்டும்?

//karki said: தசாவதாரம் பற்றி எழுத சொன்னால் தொடர்பே இல்லாமல் விஜயை கிண்டல் அடிக்கும் உங்கள் செய்கைக்கு நன்றி.//
தொடர்பு இருக்கிறது. Read between the lines! :)

Anonymous said...

தமிழர்களின் நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறதோ?

முந்தைய ஒரு இடுகையில் நீங்கள் மேற்கோளிட்ட சுஜாதாவின் கூற்று போல, பின் குறிப்பாக 'தொடர்பினை அறிந்து கொள்ள தனி மடலிடவும்' என்று சொல்லியிருக்கலாம். :)

said...

நிர்வாகியின் கடிதமும் முடிவும் ஜூப்பர்

said...

/
வந்தியத்தேவன் said...

விஜயின் 12 வேடங்களும் அட்டகாசமாக இருக்கிறது. அப்படியே 12 வித மொழிகளில் ங்ண்ணா எனப்பேசுவரா?
/

ரிப்பீட்ட்ட்டு

இன்னொரு '''உலகத்தர''' படம் வரவேண்டும் என்பது விதி என்றால் யார் என்ன செய்ய முடியும்!?

:))))