Thursday, 29 May 2008

புது மாப்பிள்ளைக்கு ஒரு அறிவுரை

நம்ம லதானந்த் சார் 'புது மாப்பிள்ளைக்கு ஓர் அறிவுரை'ன்னு ஒரு பதிவு போட்டு இருக்கார். அவர் பதிவ பத்தி கேக்கணுமா? வழக்கம் போல அசத்தல் தான். ஆனா இந்த முறை அவர் பதிவுல ஒரு பொருட்குற்றம் இருக்கு (சொற்குற்றம்? அத பத்தி நான் பேசக் கூடாது). அவர் சொல்லுறதோட சாராம்சம் என்னன்னு பார்த்தீங்கன்னா, "எல்லா விஷயத்துக்கும் மனைவியிடம் ஆலோசனை கேளுங்க ஆனா முடிவு எடுக்கிறது கணவன் கைல தான் இருக்கனும்".

மேலுக்கு பார்த்தா இது நல்ல ஆலோசனை மாதிரி தெரியும். ஆனா இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும்ன்னு சந்தேகம் தான். சிலரிடம் பல நாள் ஒர்க் அவுட் ஆகலாம் பலரிடம் சில நாள் ஒர்க் அவுட் ஆகலாம். ஆனா கண்டிப்பா ஒரு நாள் ஃபெயில் ஆகி பூமராங் மாதிரி ரிடர்ன் ஆகும். அப்போ கணவனோட கதை அம்பேல் தான்.

இத விட பெட்டரா, எப்பவுமே வொர்க் அவுட் ஆகுற ஐடியா ஒன்னு இருக்கு. சொல்றேன் கேட்டுகோங்க.

எந்த மாதிரி பிரச்சனைக்கு யார் யார் முடிவு எடுக்கனும்ன்னு தெளிவா ஒரு கோடு வரைஞ்சிக்கோங்க. மனைவி முடிவெடுக்க வேண்டிய விசயத்துல கணவன் மூக்கை நுழைக்க கூடாது. அதே மாதிரி நாம முடிவெடுக்க வேண்டிய விசயத்துல மனைவிய கேக்க கூடாது. இது முதல்ல பாக்குறதுக்கு நடக்க சாத்தியமில்லாத விசயம் மாதிரி தெரியும். ஆனா நடக்க கூடிய விசயம் தான்.

உதாரணம் பாருங்க. உங்களுக்கே புரியும்.

இப்ப எங்க வீட்ல பார்த்தீங்கன்னா, 'வீடு வாங்குறதா இல்ல நிலம் வாங்குறதா?', 'லீவுக்கு கேரளா போறதா இல்ல அந்தமான் போறதா?' 'அக்ஷய த்ரிதைக்கு கம்மலா? வளையலா?', 'இன்னைக்கு டிபனுக்கு இட்லியா தோசையா?', 'பணத்த பாங்க்ல போடலாமா இல்ல ஷேர் வாங்கலாமா?' - இந்த மாதிரி சின்ன சின்ன விசயத்துல எல்லாம் முடிவெடுக்குறது என் மனைவி தான். நான் இதுல எல்லாம் தலையிடுறதே இல்லை.

அப்ப நானு?

'அமெரிக்காவில ஹிலாரி ஜெயிக்கணுமா இல்ல ஒபாமாவா?', 'ஐ.பி.எல் கிரிக்கெட் வேணுமா வேஸ்ட்டா?', 'ஓசோன் ஓட்டைக்கு காரணம் யாரு?', '2011ல தமிழக முதல்வர் யார்' - இந்த மாதிரி பெரிய பெரிய விசயம் எல்லாம் என் கண்ட்ரோல். இதுல எங்க அம்மிணிய ஆட்டைக்கு சேர்க்க மாட்டேன்.

இதுவரைக்கும் நம்ம வாழ்க்கை ஸ்மூத்தா போயிக்கிட்டு இருக்கு. நீங்களும் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

14 குட்டு:

said...

//அப்ப நானு?

'அமெரிக்காவில ஹிலாரி ஜெயிக்கணுமா இல்ல ஒபாமாவா?', 'ஐ.பி.எல் கிரிக்கெட் வேணுமா வேஸ்ட்டா?', 'ஓசோன் ஓட்டைக்கு காரணம் யாரு?', '2011ல தமிழக முதல்வர் யார்' - இந்த மாதிரி பெரிய பெரிய விசயம் எல்லாம் என் கண்ட்ரோல். இதுல எங்க அம்மிணிய ஆட்டைக்கு சேர்க்க மாட்டேன்.///

அப்ப வீட்ல மதுரை ஆட்சின்னு சொல்லுங்க

வால்பையன்

said...

:)
kalakkal....

said...

ம்.. வாழத்தெரிந்தவர் நீங்கள்..!! :)))

said...

என்னது,காந்தியை சுட்டு கொன்னுட்டாங்களா ????????!!!!!!!!

said...

இந்த மாதிரி பெரிய பெரிய விசயம் எல்லாம் என் கண்ட்ரோல்.

:)))))))))))))

said...

//வால்பையன்: அப்ப வீட்ல மதுரை ஆட்சின்னு சொல்லுங்க//
வீட்ல மதுரை ஆட்சி இருந்துட்டு போகுது விட்டுத் தொலைங்க. நம்மளுக்கு எவ்ளோ பெரிய பெரிய பொறுப்பு எல்லாம் இருக்கு. அதப் பாருங்க முதல்ல!

said...

// அறிவன்: என்னது,காந்தியை சுட்டு கொன்னுட்டாங்களா ????????!!!!!!!!//
இன்னும் எம்.ஜி.ஆர் சாகலைன்னு நம்புற ஜனங்க இருக்காங்க தெரியுமா? அதே மாதிரி அறியாமை தான் இந்த விசயமும். அப்படி அறியாமையில இருக்கிற ஆண்கள் வாழ்க்கையில் ஒளியேத்த எழுதினது தான் இந்த பதிவு. ஓல்டா இருந்தாலும் கோல்டு.

said...

இந்த மாதிரி பெரிய பெரிய விசயம் எல்லாம் என் கண்ட்ரோல்.

:)))))))))))))

said...

//என்னது காந்தியை சுட்டுக் கொன்னுட்டாங்களா?//
பிரமாதம்.

said...

சூப்பர்!! சூப்பர்!!!! மணி

said...

மனைவியின் தாயும்/தந்தையும் முடிவு எடுக்க ஆரம்பித்தால் தங்களின் நிலைப்பாடு என்ன ?

said...

//அவனும் அவளும்: மனைவியின் தாயும்/தந்தையும் முடிவு எடுக்க ஆரம்பித்தால் தங்களின் நிலைப்பாடு என்ன ?//
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி சின்ன விசயத்தில் தானே. தாராளமாக எடுக்கட்டுமே! நம்ம ஏரியா பெரிய விசயம் தான். அதுல க்ராஸ் பண்ணாத வரையில் சந்தோஷமே! :)

said...

IPL வேணுமா, வேணாமாங்கற முடிவு உங்க கையில.. ஆனா, டி.வியில IPL பாக்கறதா இல்ல சீரியல் பாக்கறதாங்கற முடிவை அவங்கதானே எடுப்பாங்க..

:)))

said...

//PPattian : புபட்டியன் said...
IPL வேணுமா, வேணாமாங்கற முடிவு உங்க கையில.. ஆனா, டி.வியில IPL பாக்கறதா இல்ல சீரியல் பாக்கறதாங்கற முடிவை அவங்கதானே எடுப்பாங்க.. //

அது என்னமோ வாஸ்தவம் தான் :(