Sunday, 13 April 2008

சுஜாதா சொன்னது சரியா?

குடும்ப அரசியல் பதிவில் நான் இப்படி எழுதி இருந்தேன்

"அவர் (விஜயகாந்த்) கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது. "
இதற்கு ஒரு அனானி எழுதியிருந்த பின்னூட்டம்
"பாமக, கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாலும் பரவால்ல. லதிமுக ஜனதான்னு ஒரு ஆள் கட்சிக்க்கு எல்லாம் வரலாறு புவியியல் இருக்குன்னு சொல்லுர உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் அரசியல் பேசுறத நிறுத்தனும். அப்போ தான் நாடு உருப்படும்."
இதைப் படித்ததும் சில வருடங்களுக்கு முன் சுஜாதா ஒரு கட்டுரையில் (கற்றதும் பெற்றதுமா இல்லை கடைசி பக்கங்களா என்று சரியாக நினைவில்லை) எழுதியது தான் ஞாபகம் வந்தது.
"குமுதம் இதழ் தற்போது ஓட்டக்காரர்களாலும் ஆட்டக்காரர்களாலும் பாட்டுக்காரர்களாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் டி.ராஜேந்தர் தயாரித்த குமுதம் இதழில் ஒரு பகுதியை கருத்து தெரிவிக்காமல் அப்படியே தருகிறேன்.

என் பையனைப் பொறுத்த வரைக்கும் ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு. ஸ்கூல் ஒர்க் பண்ண , ஸ்டடி பண்ண ஒரு டியூஷன் , தமிழுக்கு ஒரு டியூஷன் , இப்படி மூணு டியூஷனுக்குப் பையன் போறான். இதைத் தவிர கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு , ஜிம்னாஸ்டிக் வகுப்பு , தலைகீழாய் பையன் நடப்பான் , ஸாமர்சால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். இதைத் தவிர சனி ஞாயிறில் சினிமா ஃபைட்டிங் , காலையிலே கத்துக்கறான். கம்புச் சண்டை , மான் கொம்புச் சண்டை , குத்துச் சண்டை இந்த மாதிரி அதுக்கான ஸ்டண்ட் மாஸ்டர் வச்சு கத்துத் தர்ரேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு...

மேற்கோளிட்ட இந்த வாக்கியங்களின் சமூகவியல் சார்ந்த அர்த்தம் தெரிய வேண்டுமெனில் எனக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர் அனுப்பவும்."
அடுத்த வாரம் அவருக்கு விளக்கம் கேட்டு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர்கள் வந்ததாக எழுதி, வர வர வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து கொண்டே போகிறதோ என்று வருத்தப்பட்டிருந்தார் :(

3 குட்டு:

டிஆர் தற்கொலைப் படை said...

லதிமுகவின் கொள்கையயை தேடிக் கொண்டியிருப்பதால், நாங்கள் உங்கள் மீதான கண்டனத்தை பிறகு பதிவு செய்வோம்.

said...

உண்மையாக இது போல் எழுதி இருந்தாரா டி ஆர் ?

said...

அவனும் அவளும் சொன்னது: உண்மையாக இது போல் எழுதி இருந்தாரா டி ஆர் ?

ஆம். அந்த சமயத்தில் குமுதம் பத்திரிக்கையில் வாரம் ஒருவர் ஆசிரியராக இருந்தார். அப்படி டி.ஆர் இருந்த போது இப்படி எழுதியிருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது.