Friday, 2 November 2007

நவம்பர் மாத PIT போட்டி

முன்குறிப்பு: முதலில் PIT அறிவித்து இருக்கும் இந்த மாத போட்டிக்கான புகைப்படங்கள். மற்றவை பின்குறிப்பில்.
புகைப்படம் 1:


புகைப்படம் 2:


இப்பொழுது சில பின்குறிப்புக்கள்:
பின்குறிப்பு 1: என்னடா படம் எல்லாம் இவ்ளோ மோசமா இருக்குதேன்னு திட்டாதீங்க. பின்குறிப்பு #2 படிங்க.

பின்குறிப்பு 2: இந்த போட்டிக்காக கொஞ்சம் படம் சுட்டுகிட்டு வரலாம்னு கேமராவ தேடினா, அத காணவே காணோம். ஒரு நாள் முழுக்க தேடின பிறகு, சரி ஊருக்கு போய் இருக்கிற சம்சாரத்துகிட்ட கேட்க்கும் போது தான் தெரிஞ்சது, அவங்க இந்தியா போகும் போது அத கையோட எடுத்துக்கிட்டு போயிடாங்கனு! இது என்னடா மதுரை மணிக்கு வந்த சோதனைன்னு, சரி மொபைல படம் பிடிக்கலாம்னு பார்த்தா, சனியன் நோக்கியா 6021 மாடல்ல கேமராவே இல்ல! அதனால நான் எடுத்த படத்துல இருந்து, அழகா நின்னு போஸ் கொடுத்த தோழர் தோழியர் எல்லோரையும் கட் பண்ணிட்டு பார்க்கும் போது கிடைச்சது இது தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க ப்ளீஸ்.

பின்குறிப்பு 3: நான் சான் பிரான்சிஸ்கோல கொஞ்ச நாள் இருந்தேன். அங்க இருக்கிற ரோடு எல்லாம் சூப்பரா இருக்கும். அத ஒரு மூணு ரோல் சுட்டு வச்சேன். அது எதுவும் இப்போ கைவசம் இல்ல. அது மட்டும் இப்போ கைல இருந்திருந்தா முதல் பரிசுல இருந்து கடைசி பரிசு வரை எல்லாம் நம்மளது தான்!

பின்குறிப்பு 4: இலவச இணைப்பா இன்னொரு படம். என்னடா இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒண்ணும் இல்ல, முதல் படத்தோட அம்மா தான் இவங்க!

அம்மா அழகா இல்ல பொண்ணு அழகான்னு சொல்லிட்டுப் போங்க. :)

பின்குறிப்பு 5:
மேல போட்டு இருக்கிற படம் எல்லாம் போட்டியில ஜெயிக்காதுன்னு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் போட்டதுக்கு காரணம் அட்லீஸ்ட் பதிவு கவுண்ட்ல ஒன்னு ஜாஸ்தி ஆகுதுல்ல...அதான்!

14 குட்டு:

said...

பின்குறிப்பு 5: மேல போட்டு இருக்கிற படம் எல்லாம் போட்டியில ஜெயிக்காதுன்னு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் போட்டதுக்கு காரணம் அட்லீஸ்ட் பதிவு கவுண்ட்ல ஒன்னு ஜாஸ்தி ஆகுதுல்ல...அதான்!

தீர்ப்பு நாட்டாமை தான் சொல்லுவாறு, நீங்களெ எப்படி போட்டியில ஜெயிக்காதுன்னு சொல்லலாம்

said...

மணி.. முதல் படம் அருமையா வந்திருக்கு (கொஞ்சம் போகஸ் பாறைல இருப்பதை போல தெரியுது..) .. ரோடு பற்றின படங்கள்ல வித்தியாசமாவே இருக்கு.. வாழ்த்துக்கள்...

said...

புகைப்படம் 2 very nice !

said...

இரண்டாவது படம் தலைப்புக்கு மிகப்பொருத்தமா சாலையை பிரதானமா காட்டுது வாழ்த்துக்கள்.

said...

நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

said...

Baby Pavan,
//தீர்ப்பு நாட்டாமை தான் சொல்லுவாறு, நீங்களெ எப்படி போட்டியில ஜெயிக்காதுன்னு சொல்லலாம்//
வழக்கு நிலுவையில இருக்கும் போது அதப் பத்தி கருத்து சொன்னது என் தப்பு தானுங்கன்னா.

said...

யாத்திரீகன்,
//கொஞ்சம் போகஸ் பாறைல இருப்பதை போல தெரியுது//

போகஸ் பாறைல இல்ல, அந்த பாறைக்கு பக்கத்துல இருந்த ஒரு அழகான பொண்ணு மேல :)
அந்த காமிராவில் 'Depth of field' இவ்ளோ தான் கொண்டு வர முடிஞ்சது.

said...

யாத்திரீகன், A n&, ஒப்பாரி:
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

said...

//இலவச இணைப்பா இன்னொரு படம். என்னடா இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒண்ணும் இல்ல, முதல் படத்தோட அம்மா தான் இவங்க!//

சிரி(ற)ப்பு பரிசாக இதனை நாட்டாமைகள் கண்டுக்க வேண்டுகிறேன்.

said...

நட்டு,
//சிரி(ற)ப்பு பரிசாக இதனை நாட்டாமைகள் கண்டுக்க வேண்டுகிறேன்.//
நாட்டாமைகள் கண்டுக்கிறாங்களோ இல்லையோ, நீங்க கண்டுக்கிட்டதுக்கும் உங்க சிபாரிசுக்கும் ரொம்ப நன்றி!

said...

இரண்டாவது படம் நல்லா வந்திருக்குதுங்க. கொஞ்சம் sharpness அதிகமா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

முதல் படம் அபாரம். ஆனால் focus சாலைகள் மீது மிக குறைவாக இருக்கு..

வாழ்த்துக்கள் நண்பரே.

said...

விழியன்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

//இரண்டாவது படம் நல்லா வந்திருக்குதுங்க. கொஞ்சம் sharpness அதிகமா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.//
உண்மையில் அது கூர்மையாக (sharp!) இருந்த படம் தான். சற்று குளுமையாக தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று நான் தான் கொஞ்சம் மழுக்கி மொக்கையாக்கி வைத்திருக்கிறேன்! :)

//முதல் படம் அபாரம். ஆனால் focus சாலைகள் மீது மிக குறைவாக இருக்கு..//
சரியாகச் சொன்னீர்கள்.
படம் எடுத்த சூழ்நிலை அப்படி. அதைப் பற்றி தனி பதிவு ஒன்று போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்!

said...

படங்கள் நல்லா வந்து இருக்கு வாழ்த்துக்கள் :)

said...

நாகை சிவா,
//படங்கள் நல்லா வந்து இருக்கு வாழ்த்துக்கள் :)//
வந்ததுக்கும் வாழ்த்தினதுக்கும் நன்றி.